
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து தனக்கென ரசிகர்களிடம் தனி இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் தற்போது பாலிவுட்டில் களமிறங்கி இருக்கிறார். பாலிவுட்டில் தன்னுடைய அறிமுக படமான ராமாயணத்தில் ரன்பீர் கபூர், யாஷ் மற்றும் சன்னி தியோல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படத்தின் 1 -வது பாகம் வருகிற 2026 -ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனவும், படத்தின் 2-வது பாகம் 2027 -ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனவும் படக் குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் அமீர்கானின் மகன் ஜூனைத் கான் ஜோடியாக “ஏக் தின்” என்ற படத்தில் சாய் பல்லவி ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் இயக்குனர் சுனில் பாண்டே. படத்தினை அமீர்கான் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது.
பாலிவுட்டில் சாய்பல்லவியின் முதல் திரைப்படம் ராமாயணம் தான். அதில் தான் அவர் நடிக்க முதலில் கமிட் ஆனார். அதன் பிறகு அமீர் கானின் மகனுடன் நடிக்கும் ஏக் தின் திரைப்படம் முன்னதாகவே வருகிற நவம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.