இன்று சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z பிளிப்  5 மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாடலோடு கேலக்ஸி Z போல்ட் 5, கேலக்ஸி வாட்ச் 6 சீரியஸ் என பல இதர சாதனங்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் கேலக்ஸி Z பிளிப்  5 மாடல் முன்பதிவு செய்பவர்களுக்கு இலவசமாக ஸ்டோரேஜ் அப்கிரேட் வழங்க இருக்கிறது.

இதே போன்று கேலக்ஸி வாட்ச் 6 சீரிஸ் வாங்க முன் பதிவு செய்வதற்கு சிறப்பு சலுகை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சாம்சங் நிறுவன சாதனங்கள் குறித்த தகவலை டிப்ஸ்டரான எவான் பிலாஸ்
தன்னுடைய திரட்ஸ் செய்தியில் பதிவிட்டுள்ளார்.