ஜியோவின் புதிய லேப்டாப் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வர உள்ளது. கடந்த ஆண்டு வெளியான ஜியோ புக்கின் தொடர்ச்சியாக வரும் இந்த ஜியோ புக் 2ரூ.20 ஆயிரத்திற்கு விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய லேப்டாப்பின் எடை 990 கிராம். இது Android OSல் இயங்கும். 4G இணைப்பைக் கொண்டிருக்கும். ஜியோவின் புதிய லேப்டாப்பில் பேட்டரியை நாள் முழுவதும் வழங்குவதற்காக மேம்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

அமேசான் இந்தியாவில் வரவிருக்கும் தயாரிப்புக்கான பிரத்யேக மைக்ரோ சைட்  அமைக்கப்பட்டுள்ளது. புதிய JioBook ஆனது JioOS (Android அடிப்படையிலானது) மற்றும் ஆக்டா கோர் சிப்செட்டைக் கொண்டிருக்கும்.   டீஸர் படங்களில், மடிக்கணினியின் சில அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.