போன்பே ஆப் மூலமாக நாம் எளிதில் பண பரிவர்த்தனையை வீட்டிலிருந்தே செய்ய முடியும். நம்முடைய செல்போனில் இருந்து மற்றவருக்கு பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும்.  இதன் மூலம் பணப்பரிமாற்றம் செய்வது பாதுகாப்பானதாகவும் உள்ளது. இந்நிலையில் இப்போது வரி செலுத்துவோருக்கு ஃபோன் பே புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது இனி தொலைபேசி மூலமும் வரி செலுத்தலாம். புதிய சேவையானது PhonePay மற்றும் டிஜிட்டல் B2B கட்டணங்கள் மற்றும் சேவை வழங்குநரான Paymate ஆகியவற்றுக்கு இடையே கூட்டு முயற்சியில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு அல்லது UPI மூலம் ஃபோன் பேயில் வருமான வரி பரிவர்த்தனைகள் செய்யப்படலாம். புதிய அம்சம் திங்களன்று பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.