ஹைதராபாத்தில் இயங்கி வந்த ஒரு போலி இஞ்சி-பூண்டு பேஸ்ட் தொழிற்சாலை இப்போது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் சுகாதாரமற்ற முறையில், அழுகிப்போன இஞ்சி மற்றும் பூண்டுத் துண்டுகளைப் பயன்படுத்தி இந்தப் பேஸ்ட் தயாரிக்கப்பட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்தப் பேஸ்ட் பார்ப்பதற்கு நன்றாக வெள்ளையாகவும், கெட்டியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஆபத்தான கெமிக்கல்கள் தாராளமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிப் பார்ப்பவர்களைக் குமட்டல் எடுக்க வைத்துள்ளது. அதிகாரிகள் நடத்திய அதிரடி வேட்டையில் சுமார் 4 டன் தயாரான இஞ்சி-பூண்டு பேஸ்ட்டும், 6 டன் மூலப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் தொழிற்சாலை உரிமையாளர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடைகளில் வாங்கும் பேஸ்ட்டுகளில் இவ்வளவு பெரிய மோசடி நடப்பது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
