
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெறுகிறது இந்த மாநாட்டில் மாலை 6 மணி அளவில் கட்சியின் தலைவரான விஜய் அவர்கள் உரையாற்ற இருக்கிறார் ரசிகர்களாலும் தொண்டர்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மாநாட்டிற்கு ஏராளமானோர் வருகை புரிய துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் தொண்டர் ஒருவர் மாநாடு நடக்கும் இடத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சென்று பார்த்தும் உணவகம் எதுவும் இல்லாததால் சாப்பிடுவதற்கு சாப்பாடு கிடைக்கவில்லை. தின்பண்டங்கள் தண்ணீர் பாட்டில்கள் இருக்கிறதே தவிர சாப்பாடு என்று எதுவும் கிடைக்கவில்லை ஒரு கடை தான் இருக்கிறது அங்கு கிடைத்தால் சாப்பிடுவோம் இல்லை என்றால் சாப்பிடாமல் மாநாட்டிற்கு செல்ல வேண்டியது தான் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.