தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது. நேற்று முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்று கொண்ட நிலையில் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.
Watch | தேர்தலில் வெற்றி பெற்ற சான்றிதழை கொண்டு வராததால் MLA ஆக பதவியேற்க முடியாமல் போன அமைச்சர் கீர்த்தனா#SunNews | #TNAssembly | #TVKGovt | #Keerthana pic.twitter.com/tNXevBHpJc
— Sun News (@sunnewstamil) May 11, 2026
திருச்சி கிழக்கு தொகுதியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று முதலமைச்சராக பதவி ஏற்கும் போது ஆண்டவன் மீது ஆணையிட்டு என்று கூறிய விஜய் இன்று சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்கும் போது உளமாற உறுதி ஏற்கிறேன் என்றார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் பொறுப்பேற்று வரும் நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் சட்டமன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்று வரும் நிலையில் அமைச்சர் கீர்த்தனாவும் பொறுப்பேற்பதற்காக வந்தார். ஆனால் அவர் வெற்றி பெற்ற சான்றிதழை கையில் எடுத்து வராததால் அவரால் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்க முடியாமல் போனது. மேலும் அவர் வேறொரு நாளில் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
