தமிழகச் சட்டமன்றத்தில் இன்று புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும் விழா கோலாகலமாகத் தொடங்கிய நிலையில், யாரும் எதிர்பார்க்காத ஒரு’ சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமைச்சர் கீர்த்தனா அவர்கள் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்க வந்தபோது, தனது தேர்தல் வெற்றிச் சான்றிதழை (Winning Certificate) கொண்டு வர மறந்ததால், அவரால் இன்று பதவியேற்க முடியாத சூழல் உருவானது. புதிய உறுப்பினர்கள் ஒவ்வொருவராகப் பதவியேற்று வரும் நிலையில், மிக முக்கியமான ஆவணத்தைச் சரியாகக் கொண்டு வராததால் அமைச்சரின் பதவியேற்பு தள்ளிப்போயிருப்பது கோட்டை வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

“>

ஒரு அமைச்சரே பதவியேற்பு விழாவிற்குத் தேவையான முக்கியச் சான்றிதழை மறந்துவிட்டு வந்தது அதிகாரிகளிடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சுவாரஸ்யமான தகவல் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.