தமிழகத்தின் தற்போதைய நிதிநிலை மோசமாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள சசிகலா, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “போதிய வருவாய் ஆதாரங்களே இல்லாத நிலையில், இவ்வளவு பெரிய அறிவிப்புகளை எப்படிச் செயல்படுத்த முடியும்?” என அவர் கேள்வி எழுப்பியது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வெறும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை மட்டும் வைத்து மக்களை ஏமாற்ற முடியாது என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், மறைந்த தலைவர்களான ஜெயலலிதாவோ அல்லது கருணாநிதியோ இதுபோன்ற வெறும் வாக்குறுதிகளை மட்டுமே நம்பி என்றுமே களம் கண்டதில்லை எனப் பழைய நினைவுகளை நினைவுபடுத்தினார். தற்போதைய தலைமைகள் நிர்வாக எதார்த்தத்தை மறந்துவிட்டுத் தேர்தலுக்காகப் போட்டி போட்டுக்கொண்டு அறிவிப்புகளை வெளியிடுவதாக அவர் சாடியுள்ளார். சசிகலாவின் இந்த ‘நச்’ விமர்சனம் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
