பீகார் மாநிலத்தில் ஜாதி வாரியாக மக்கள் தொகையை கணக்கெடுக்க அரசு முடிவு செய்தது. இதனால் முதல் கட்டமாக ஜனவரி 7-ல் தொடங்கி 21 வரை கணக்கெடுப்பு நடந்து முடிந்தது. இரண்டாவது கட்டமாக ஏப்ரல் மாதம் கணக்கெடுப்பு தொடங்க இருந்த நிலையில் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த இடைக்கால தடை விதித்தது இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது மக்கள் தொகை கணக்கெடுக்க அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு குறித்து மாநில முதல்வர் தேஜாஸ்ரீ யாதவ் கூறுகையில் இது மக்களுக்கு கிடைத்த வெற்றி எனக் கூறியுள்ளார்.