பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவிஸ் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தீபக் பாஸ்வான் என்ற 24 வயது இளைஞர் உடல் நலக்குறைவின் காரணமாக அனுமதிக்கப்பட்டார். அதாவது வாலிபர் வாந்தி எடுத்துக் கொண்டே இருந்ததால் சிகிச்சைக்காக உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அந்த வாலிபர் இறந்து விட்டார். இதன் காரணமாக உறவினர்கள் மருத்துவமனைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதாவது அந்த வாலிபருக்கு மருத்துவர் யூடியூப் வீடியோவை பார்த்து சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் சாதாரண வாந்திக்கு யூடியூப் பார்த்து சிகிச்சை வழங்கியதால் தான் வாலிபர் உயிரிழந்துவிட்டதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தற்போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
