குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு விசித்திரமான மோசடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ‘சாட் ஜிபிடி’-யை (ChatGPT) பயன்படுத்தி, ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பை மேம்படுத்தி, கள்ளநோட்டுகளைத் தயாரித்த 6 பேர் கொண்ட கும்பலை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் வளைத்துப் பிடித்தனர்.

இந்தக் கும்பலிடம் இருந்து சுமார் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கள்ளநோட்டுகளை மிகத் துல்லியமாக அச்சிடவும், வெவ்வேறு வரிசை எண்களை உருவாக்கவும் இவர்கள் சாட் ஜிபிடி-யை பயன்படுத்தியது போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.