இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா, மும்பை விமான நிலையத்தின் நகரும் படிக்கட்டில் (Escalator) தனது மொபைல் போனில் யாருடனோ தீவிரமாக சாட்டிங் செய்தபடி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராகுல் ஜெய்ஸ்வால் என்ற தீவிர ரசிகர், ரோஹித்தின் தனிமனித சுதந்திரத்தை மீறும் வகையில், மிக அருகில் சென்று தனது செல்ஃபி கேமரா மூலம் வீடியோ எடுக்கத் தொடங்கினார். இதைக் கவனித்த ரோஹித் சர்மா, முதலில் நாகரீகமாக கட்டை விரலை உயர்த்திக் காட்டி சைகை செய்தாலும், உடனடியாகத் தனது போனை மூடிவிட்டு, “இதை நிறுத்துங்கள், நிறுத்துங்கள்” என்று அன்பாகவும் அதே சமயம் கண்டிப்புடனும் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
இந்த 5 வினாடி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் 22 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ள இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை மோதி வருகின்றனர். “தனிமனித சுதந்திரம் என்பது மிக முக்கியமானது, ரோஹித் தனது மொபைலில் ஏதோ தனிப்பட்ட முறையில் டைப் செய்து கொண்டிருக்கும் போது, இவ்வளவு நெருக்கமாகச் சென்று வீடியோ எடுப்பது தவறானது” என்றும், “யாராக இருந்தாலும் இந்த சூழ்நிலையில் இப்படித்தான் ரியாக்ட் செய்வார்கள்” என்றும் ரசிகர்கள் பலரும் அந்த வீடியோ எடுத்த நபரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து, ரோஹித்தின் நிதானமான அணுகுமுறையைப் பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram
