சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு புகைப்படம், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் மாணவர்களின் சுகாதாரம் குறித்த கசப்பான உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்தப் புகைப்படத்தில், பள்ளி மாணவர்கள் தங்களின் மதிய உணவுத் தட்டுகளைப் பள்ளியின் அருகே ஓடும் சாக்கடை நீரில் கழுவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் குழந்தைகளுக்குச் சத்தான உணவை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ‘மதிய உணவுத் திட்டம்’, முறையான பராமரிப்பு மற்றும் தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால், மாணவர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் வகையில் மாறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
In Jamkhandi taluk’s Alabal village, government school kids are washing their plates in drain water? How filthy and broken is this system? Children’s health at risk due to sheer negligence! Authorities must fix this immediately! #Shame #ChildRights pic.twitter.com/HB5hb05NYz
— ಸನಾತನ (सनातन) (@sanatan_kannada) January 30, 2026
“>
இதனால் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தப் பல கோடி ரூபாய் செலவிடப்படுவதாகக் கூறப்பட்டாலும், கள நிலவரம் இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான சூழல் என்பது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை.
ஆனால், சாக்கடை நீரில் தட்டுகளைக் கழுவும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டது, பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தையும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கையும் காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படைத் தூய்மைப் பணிகளை உறுதி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
