தற்போதைய பாஜக எம்பி-யும் முன்னாள் அமைச்சருமான ரத்தன் லால் கட்டாரியா மரணம் அடைந்தார். இவருக்கு வயது 71. ஹரியானாவின் அம்பாலா தொகுதியில் இருந்து மக்களவைக்காக தேர்வு செய்யப்பட்டவர் ரத்தன் லால். இவர் ஜல் சக்தி துறையின் இணை அமைச்சராகவும் இருந்திருக்கிறார். 2000 முதல் 2003 வரை ஹரியானாவின் பாஜக மாநிலத் தலைவராக ரத்தன் லால் இருந்திருக்கிறார். இவரது மறைவுக்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.