தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “I’m lost”என்று குறிப்பிட்ட வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது. சமீபத்தில் நயன்தாரா தனது இன்ஸ்டால் பக்கத்திலிருந்து கணவர் விக்னேஷ் சிவன் கணக்கை அன் ஃபாலோ செய்ததால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக தகவல் வெளியானது. ஆனால் நயன்தாரா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது I’m lost என்று கூறி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.