நடிகர் அஜித் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வரும் அவர் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. விரைவில் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.