சமீபத்தில் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த நிலையில் கட்சி பெயரில் தமிழக வெற்றி (க்) கழகம் இலக்கண பிழை இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது தான் கட்சிக்கு அழகு என்று கூறி கட்சியின் பெயரில் மாற்றம் செய்ய விஜய் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்காக இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளார். விரைவில் பெயர் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.