ஜப்பானில் சற்றுமுன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹோன்ஷூ கிழக்கு கடற்கரைக்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தகவலும் வெளியாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கை தொடர்பாகவும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.