ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவருக்கான T20 போட்டியில், 18.2 ஓவர்களுக்கு ஆப்கானிஸ்தான் அணி 112 ரன்கள் எடுத்திருந்தபோது திடீரென மழை பெய்ய தொடங்கியது. இதனால் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நீண்ட நேரம் ஆகியும் மழை விடாததால், புள்ளிகள் அடிப்படையில் இந்தியா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவுக்கு 27வது தங்கம் கிடைத்துள்ளது.