தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தற்போது புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு வழிநெடுகிலும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் விஜயின் பிரச்சார வாகனத்திற்கு பாலபிஷேகம் செய்த அவரது வருகையை திருவிழா போல் கொண்டாடுகிறார்கள். அதே நேரத்தில் நடிகர் விஜய்யை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் ஏராளமானோர் பின்தொடர்ந்து செல்வதால் பரபரப்பு நிலவுகிறது. போலீசார் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் பலமுறை அறிவுறுத்தியும் தொண்டர்களும் ரசிகர்களும் கட்டுக்கடங்காமல் இப்படி விஜயின் வாகனத்தை பின்தொடர்வது அதிர்ச்சி அளிக்கிறது.
’சர்க்கார்’ பட காட்சியை நிஜமாக்கிய தொண்டர்கள்…
விஜய்யின் பிரச்சார வாகனத்திற்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் அலை அலையாய் ஆயிரக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்.!#Puducherry | #TVKVijay | #ElectionCampaign | #TVK | #PolimerNews pic.twitter.com/WsAXU5feMK
— Polimer News (@polimernews) April 4, 2026
மேலும் அதே நேரத்தில் நடிகர் விஜய்யை ஏராளமானோர் பின் தொடர்ந்து செல்லும் நிலையில் சர்க்கார் பட காட்சியை நினைவுபடுத்துவதாக பலரும் கூறுகிறார்கள். அதாவது சர்க்கார் படத்தில் நடிகர் விஜய் அரசியல் ரீதியாக அதிரடியாக நடித்திருப்பார். இந்த படத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் நிலையில் அவருக்காக ஏராளமானோர் திரண்டு வருவது போன்று படம் அமைந்து சுவாரசியமான கதைகளமாக அமைந்தது. மேலும் இதை உண்மையாக்கும் வகையில் தற்போது புதுச்சேரியில் நடிகர் விஜய்க்கு கொடுக்கப்படும் உற்சாக வரவேற்பு அமைந்துள்ளதாக பலரும் கூறுகிறார்கள். அதே நேரத்தில் பலமுறை அறிவுறுத்தியும் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் விஜயை பின்தொடர்ந்து செல்பவர்கள் விபத்தில் சுத்துவதும் நடப்பதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது
