தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் புதுச்சேரியில் தற்போது தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். புதுச்சேரியில் ஏற்கனவே 30 வேட்பாளர்களை விஜய் அறிவித்த நிலையில் அவர் மொத்தம் 23 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டிருந்தார். ஆனால் 19 தொகுதிகளில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வெறும் நான்கு தொகுதிகளில் மட்டும்தான் அனுமதி கொடுக்கப்பட்டது. நடிகர் விஜய் தமிழ்நாட்டில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் அங்கு வேட்பு மனு தாக்கல் செய்து தன் பிரச்சாரத்தை முடித்த நிலையில் தற்போது புதுச்சேரியில் பிரச்சாரத்திற்காக சென்றுள்ளார்.

 

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு புதுச்சேரியில் தற்போது உற்சாக வரவேற்பு கொடுக்கும் நிலையில் அவரது வருகையை திருவிழா போல் கொண்டாடுகிறார்கள். இதன் உச்சகட்டமாக நடிகர் விஜயின் வாகனத்திற்கு பாலபிஷேகம் செய்து தொண்டர்கள் வரவேற்றனர். நடிகர் விஜய்க்கு வழிநெடுகிலும் தொடர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு கொடுத்துவரும் நிலையில் கட்டுக்கடங்காத கூட்டத்தால் பொதுமக்கள் ஸ்தம்பித்துள்ளனர். மேலும் தொடர்ந்து விஜயை பின் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் பலர் வருவதால் தற்போது போலீசார் அதிரடியாக ஆக்சன் எடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக தடியடி நடத்தியும் வாகன ஓட்டிகளின் பைக் சாவிகளை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்