தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தற்போது புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு வழிநெடுகிலும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் விஜயின் பிரச்சார வாகனத்திற்கு பாலபிஷேகம் செய்த அவரது வருகையை திருவிழா போல் கொண்டாடுகிறார்கள். அதே நேரத்தில் நடிகர் விஜய்யை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் ஏராளமானோர் பின்தொடர்ந்து செல்வதால் பரபரப்பு நிலவுகிறது.
போலீசார் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் பலமுறை அறிவுறுத்தியும் தொண்டர்களும் ரசிகர்களும் கட்டுக்கடங்காமல் இப்படி விஜயின் வாகனத்தை பின்தொடர்வது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றதில் தமிழக வெற்றிக்கழகத்தினர் விபத்தில் சிக்கியுள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#Watch | புதுச்சேரி: விஜய்யின் பிரசார வாகனத்தை பின் தொடந்து விரட்டி, விபத்தில் சிக்கிய தவெகவினர்!#SunNews | #TVKVijay | #Puducherry | #Accident pic.twitter.com/Q2fxbKYVCa
— Sun News (@sunnewstamil) April 4, 2026
