மும்பையைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணான துருபதி, தனது மேலதிகாரியின் மரியாதையற்ற நடத்தையால் வேலையை ராஜினாமா செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

ஒரு இசை சார்ந்த கல்வி நிறுவனத்தில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் பணியாற்றிய அவர், கூடுதல் நேரம் வேலை செய்ததற்கான ஊதியத்தைக் கேட்டுள்ளார்.

அதற்கு அவரது மேலதிகாரி, “எல்லாரும் என்னுடைய விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டுதான் நடக்க வேண்டும், பிடிக்கவில்லை என்றால் நாளைக்கே வேலையை விட்டுப் போகலாம்” என்று சத்தமிட்டுப் பேசியுள்ளார்.

இந்த ஆடியோவைப் பகிர்ந்த துருபதி, “குறைவான சம்பளத்தைக் கூட பொறுத்துக் கொள்ளலாம், ஆனால் மரியாதையற்ற நடத்தையை சகித்துக்கொள்ள முடியாது” என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது சுயமரியாதைதான் முக்கியம் என்று முடிவெடுத்த துருபதியின் இந்தச் செயலுக்கு இணையதளத்தில் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. இன்றைய தலைமுறையினர் வெறும் வேலைக்காகத் தங்களது மன அமைதியையும், கௌரவத்தையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by VYLA | Dhrupadi (@vyla.world)

“>

“கூடுதல் நேர வேலைக்கு ஊதியம் வழங்க அரசு கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும்” என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களில் நிலவும் அதிகப்படியான வேலைப்பளு மற்றும் மேலதிகாரிகளின் சர்வாதிகாரப் போக்கு குறித்து இந்த வீடியோ மீண்டும் ஒரு பெரிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது.