சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் தகவல்களை பொதுநல மனுவில் குறிப்பிடுவதை ஏற்க முடியாது என்று மும்பை ஹை கோர்ட் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆபத்தான அருவி மற்றும் நீர் நிலைகளில் மூழ்கி ஒவ்வொரு ஆண்டும் 1500 முதல் 2000 பேர் இறந்து போவதை தடுக்க அரசுக்கு உத்தர விட கோர்படே என்பவர் மனு செய்தார். இறந்தவர்கள் விவரங்களை சமூக வலைத்தளங்களில் திரட்டியதாக கூறவே நீதிபதிகள் கண்டித்தனர். மேலும் சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் எந்த ஒரு தகவல்களையும் பொதுநல மனுவில் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.