இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் மக்களுக்கு ஏதாவது புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும் நிலையில் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி போலி சிம் கார்டுகளை தடுப்பதற்காக புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளது. அதாவது சிம் கார்டுகளை விற்பனை செய்யும் டீலராக இருந்தால் அரசு அங்கீகாரம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் பத்து லட்சம் ரூபாய் வரை அபராத மிதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே புது சிம் கார்டு வாங்கும் வாடிக்கையாளர்கள் ஆதார் மற்றும் மக்கள் தொகை தரவுகளை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஒருவர் மொத்தமாக ஒன்பது சிம் கார்டுகள் வரை மட்டுமே வாங்கி பயன்படுத்தலாம் எனவும் சிம் கார்டு வேலிடிட்டி முடிந்து 90 நாட்களுக்கு பின்னர் அந்த மொபைல் எண் வேறு ஒருவருக்கு சொந்தமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் அனைத்தும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது.