இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவையில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது விமானத்திற்கு ஈடாக பல சேவைகள் வழங்கப்பட்டாலும் விமானத்தில் உணவு உள்ளிட்ட சேவைகள் உள்ளது. அதன்படி வந்தே பாரத் ரயில்களில் சில புதிய சேவைகள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் தெற்கு ரயில்வேயில் ஆறு ஜோடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை உள்ளடக்கிய திட்டமாக யாத்ரி சேவா அனுபந்த் என்ற திட்டத்தை ரயில்வே தற்போது அறிவித்துள்ளது.

இதன் மூலமாக உணவு மற்றும் பானங்கள் துறையில் பயணிகளுக்கான கூடுதல் விருப்பங்களை கொண்ட சிறப்பு மெனு வழங்கப்படும் எனவும் பயணிகளுக்கு பயண பாகங்கள் மற்றும் தேவையான பொருட்களை கேட்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வருகை மற்றும் புறப்படும் போது டாக்ஸி சேவை வழங்கப்படும். மேலும் வருகை மற்றும் புறப்படும் நிலையங்களில் சர்க்கரை நாற்காலிகளுடன் பயணிகளுக்கு உதவி செய்யப்படும் எனவும் விமானத்தில் உள்ளது போல பொழுதுபோக்கு வசதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.