இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் சப்பாத்தியில் கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், சமூக வலைதளம் மூலம் ஐஆர் சிடிசியிடம் புகார் அளித்தார். ஜூலை 24 அன்று போபாலில் இருந்து குவாலியர் செல்லும் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் போது நடந்த இச்சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்தது. இதற்கு பதிலளித்த ரயில்வே துறை, சம்பந்தப்பட்ட பயணியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.
