கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நேற்று (ஏப்ரல் 24, 2026) தனது 54-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தனது தந்தைக்கு எளிமையான முறையில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தற்போது ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் விளையாடி வரும் அர்ஜுன், தனது தந்தையின் பிறந்தநாளாக இருந்தபோதிலும் கிரிக்கெட் மீதான அர்ப்பணிப்பு காரணமாகக் கேக் சாப்பிட மறுத்துவிட்டார்.
தான் இனிப்புகளைத் தவிர்த்து வருவதாகவும், தனது உணவு முறையை எக்காரணத்தைக் கொண்டும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை லக்னோ அணி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி மூலம் ஐபிஎல் பயணத்தைத் தொடங்கிய அர்ஜுன், அதிக வாய்ப்புகள் கிடைக்காததால் இந்த சீசனுக்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாறினார். இதுவரை 5 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Sachin sir, Arjun aur hamare taraf se aapke liye cake 🍰
Happy Birthday ❤️💙 pic.twitter.com/wuO4VrZNau
— Lucknow Super Giants (@LucknowIPL) April 24, 2026
“>
இந்த சீசனில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5-ல் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இதுவரை ஒரு போட்டியில் கூட அர்ஜுனுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தனது உடற்தகுதியிலும் பயிற்சியிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
ஏப்ரல் 26-ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக லக்னோ தனது அடுத்த போட்டியில் விளையாட உள்ளது.
