
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைக்கிறது. இவ்வாறு வெளியாகும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் மலைக்கோவில் படிக்கட்டுகளில் ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கம்பிகளில் குரங்குகள் மனிதர்களைப் போல சரிக்கு விளையாடி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Life is too short not to nurture your inner child. pic.twitter.com/xugYndXI9s
— Susanta Nanda (@susantananda3) August 1, 2023