அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
தொடக்கத்தில் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமரவைக்கப்பட்ட சஞ்சு, பின்னர் கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான வாழ்வா-சாவா போட்டிகளில் அதிரடி அரைசதங்களை விளாசினார்.
நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் 89 ரன்கள் குவித்து மிரட்டிய அவர், இந்த தொடரில் மட்டும் 5 இன்னிங்ஸ்களில் 321 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம், ஒரு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் (319 ரன்கள்) நீண்டகால சாதனையை முறியடித்து ‘புதிய ரன் மெஷினாக’ உருவெடுத்துள்ளார். சஞ்சுவின் இந்த அபார ஆட்டத்தால் இந்திய அணி 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியுள்ளதுடன், கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
