கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்தில் இருந்த ஒரு தம்பதியினரின் சுவாரஸ்யமான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போட்டியின் நடுவே அந்தத் தம்பதிக்குள் ஒரு சிறு வாக்குவாதம் ஏற்பட, மனைவி கோபமாக எழுந்து அங்கிருந்து சென்றார். ஆனால் கணவரோ, மனைவியைத் தேடிச் செல்லாமல் போட்டியைப் பார்ப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தினார்.

சிறிது நேரம் கழித்து மனைவி மீண்டும் அமைதியாகத் தனது இடத்திற்கே வந்து அமர்ந்தார். இந்தத்தருணம் பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாகவும், அதே சமயம் பலரது வாழ்க்கையோடு ஒத்துப் போவதாகவும் அமைந்தது.
<a href=”http://

“>

சமூக வலைதளங்களில் இந்தப் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், கிரிக்கெட் மீதான அந்த நபரின் தீவிரத்தைப் பாராட்டிப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “காதலை விட கிரிக்கெட் தான் முக்கியம் என்று அவர் நிரூபித்துவிட்டார்” எனச் சிலர் கிண்டலாகக் கூறி வருகின்றனர்.

அதே வேளையில், இந்த வீடியோ உண்மையிலேயே நடந்ததா அல்லது கவனத்தை ஈர்ப்பதற்காகத் திட்டமிட்டு நடிக்கப்பட்டதா என்ற சந்தேகத்தையும்சிலர் எழுப்பியுள்ளனர். எது எப்படியோ, மைதானத்தில் நடந்த கிரிக்கெட் ஆட்டத்தைப் போலவே, ரசிகர்களுக்கிடையே நடந்த இந்தச் சிறு நாடகமும் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.