தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம், புதிய அரசை அமைக்கத் தயாராகி வரும் நிலையில், பதவியேற்பு விழா குறித்த ஆலோசனைகள் தலைமைச் செயலகத்தில் சூடுபிடித்துள்ளன.

தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையில் இன்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் உள்துறைச் செயலாளர் மணிவாசன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழாவுக்கான வழிமுறைகள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
​வரும் மே 7-ம் தேதி (நாளை மறுதினம்) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான முறையில் பதவியேற்பு விழாவை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால், நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் அரியணை ஏறும் அந்த வரலாற்றுத் தருணத்தைக் காண ஒட்டுமொத்த மாநிலமே விழாக்கோலம் பூண்டுள்ளது.