தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஸ்டாலினை தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் வி எஸ் பாபு தோற்கடித்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் நிலையில் தேர்தலுக்கு முன்பாகவே ஆதவ் அர்ஜுனா ஒரு பொது மேடையில் இதுகுறித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி பெறுவோம். சென்னை தமிழக வெற்றி கழகத்தின் கோட்டையாக மாறும்.

திருமாவளவன் சார் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைவரும் மேலோட்டமாக கூட்டணிக்காக மட்டுமே விஜயை எதிர்க்கிறார்கள். காலம் அனைத்தையும் சரிசெய்யும் என்று கூறினார். மேலும் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் திமுக கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் காங்கிரஸ் போன்றவைகள் ஆதரவு கொடுத்ததால் பெரும்பான்மை 120 ஆக உயர்ந்து விஜய் ஆட்சி அமைக்க இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.