இந்திய கிரிக்கெட் அணிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16, 2025) ஒரு மறக்க முடியாத மோசமான நாளாக அமைந்தது. முதலில், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
இதனையடுத்து, கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற ‘ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ்’ 2025 கிரிக்கெட் தொடரில், பரம எதிரியான பாகிஸ்தான் ‘ஏ’ அணி இந்திய ‘ஏ’ அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியா ‘ஏ’ அணி முதலில் பேட்டிங் செய்து வெறும் 136 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், பாகிஸ்தான் அணி இலக்கை வெறும் 13.2 ஓவர்களில் எட்டியது. ஆட்டத்தின் முடிவைவிட, நடுவரின் சர்ச்சைக்குரிய தீர்ப்பும், இந்திய-பாகிஸ்தான் வீரர்களிடையே கைகுலுக்க மறுக்கப்பட்ட சம்பவங்களும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
கேட்ச் சர்ச்சை: நடுவரின் ‘அவுட் இல்லை’ தீர்ப்பால் கொதித்த இந்திய கேப்டன் ஜிதேஷ் சர்மா!
பாகிஸ்தான் ‘ஏ’ அணியின் பேட்டிங்கின்போது, சுழற்பந்து வீச்சாளர் சுயாஷ் சர்மாவின் பந்தில், பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சதகத் அடித்த பந்தை பவுண்டரி கோட்டின் அருகே நேஹல் வதேரா மிக அற்புதமாகப் பிடித்தார்.
🚨 So as per new rules, the fielder who collected the ball and throws it in, should be inside the boundary roops before second player completes the catch.#PAKvIND pic.twitter.com/3kbkRGoPlX
— Ahmad Haseeb (@iamAhmadhaseeb) November 16, 2025
“>
பந்தைப் பிடித்த பின்னர் வதேரா எல்லைக் கோட்டுக்கு வெளியே சென்றுவிட்டு, பந்தை மேல்நோக்கி எறிந்து, சரியான விதத்தில் உள்ளே வந்து பிடித்து கேட்சை நிறைவு செய்தார். இது அவுட் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கள நடுவர் அதனை மூன்றாவது நடுவருக்குப் பரிந்துரைத்தார்.
ரீப்ளேக்களில் கேட்ச் சரியாகப் பிடிக்கப்பட்டது தெளிவாகத் தெரிந்தும், மூன்றாவது நடுவர் மொர்ஷெட் அலி கான் ‘அவுட் இல்லை’ என்று தீர்ப்பளித்தார். இந்தத் தவறான முடிவால் ஆத்திரமடைந்த இந்திய ‘ஏ’ அணி கேப்டன் ஜிதேஷ் சர்மா மற்றும் 14 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி உட்பட அனைத்து வீரர்களும் நடுவருடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
உறவில் விரிசல்: பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த இந்திய அணி!
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் உறவுகள் கடந்த சில காலமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளன. ஆசியக் கோப்பை ‘ரைசிங் ஸ்டார்ஸ்’ தொடரின் இந்த ஆட்டத்திலும், தேசிய கீதத்திற்குப் பிறகு இந்திய ‘ஏ’ அணியினர் பாகிஸ்தான் ‘ஷாஹீன்ஸ்’ அணி வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர்.
முன்னதாக, செப்டம்பரில் நடந்த ஆசியக் கோப்பையின்போதும், இந்திய சீனியர் அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க மறுத்திருந்தார்.
அவரது வழியைப் பின்பற்றி, இந்தத் தொடரில் இந்தியா ‘ஏ’ அணி கேப்டனாக இருந்த ஜிதேஷ் சர்மாவும், டாஸ் போடும்போது பாகிஸ்தான் கேப்டன் இர்பான் கானுடன் கைகுலுக்க மறுத்தார். மேலும், ஆசிய கோப்பை வெற்றியாளர் கோப்பையைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஹ்சின் நக்வி வழங்க முன்வந்தபோது, அதை சூர்யகுமார் யாதவ் ஏற்க மறுத்த சம்பவத்தால் இருநாட்டு கிரிக்கெட் உறவுகளிலும் பதற்றம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
