கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே லட்சுமிபுரம் பகுதியில் சேர்ந்த சுவாமிதாஸ். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சுவாமிதாஸ் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆறுதங்கன்விளை பகுதியில் இருக்கும் சகோதரி வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

சுவாமிதாசின் தங்கை கணவர் மளிகை கடை நடத்தி வருவதால் அவருக்கு உதவியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 21ஆம் தேதி சுவாமிதாஸ் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்ற போது இரு சக்கர வாகனத்தில் உள்ள இரண்டு பேர் அரிவாளால் சுவாமிதாஸை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுவாமிதாசின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இன்று புதூர் பகுதியைச் சேர்ந்த 33 வயது உடைய ஸ்டாலின் என்பவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவரிடம் விசாரணை நடத்திய போது பணத்திற்காக சுவாமிதாஸ் கொலை செய்தது தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே இரண்டு கொலை மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஒரு மர்ம நபர் கூறியதன் பெயரில் சுவாமிதாஸை கொலை செய்தோம்.

காரணம் தெரியாது. கொலை பண்ண சொன்னாங்க பண்ணிட்டேன் என ஸ்டாலின் கூறியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு தான் கொலைக்கான முழு காரணம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.