கொரோனா தடுப்பூசி இளைஞர்களிடையே திடீரென மரண அபாயத்தை அதிகரிக்கவில்லை என்று ஐசிஎம்ஆர் ஆய்வில் கண்டறிந்துள்ளது. ஐசிஎம்ஆர் வெளியிட்ட ஆய்வறிக்கையில், உண்மையில் கோவிட்-19 தடுப்பூசி திடீர் மரண ஆபத்தை குறைக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் திடீர் உயிரிழப்புகளுக்கு அளவுக்கதிகமாக மது அருந்துவது, அதிக உடல் உழைப்பு, வேறு சில உடல்நல பிரச்னைகள் போன்றவை காரணமாக அறியமுடிகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதித்தோர் உடல்ரீதியான அதிக வேலைகள் & அதிக உடற்பயிற்சிகளை செய்வதை தவிர்க்க வேண்டும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.