தமிழக அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சித் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அதிரடியான ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

“பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், பதாகைகள் அல்லது கட்-அவுட்கள் எதையும் வைக்கக்கூடாது” என அவர் கறாராகத் தெரிவித்துள்ளார். கொண்டாட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால், அவர்கள் மீது கட்சி ரீதியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

“>

 

முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில், “மக்கள் நலனே முக்கியம்” என்கிற தாரக மந்திரத்தோடு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசியல் கட்சிகளின் பேனர் கலாச்சாரத்தால் அவ்வப்போது விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படும் சூழலில், தவெக தரப்பிலிருந்து வந்துள்ள இந்த ‘ப்ளான்’ பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.