ஜம்மு-காஷ்மீரில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகள் சலசலப்பான சாலைகளாக மாறியுள்ளன. மக்கள் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், இராணுவம் மற்றும் NDRF படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கடுமையான சூழ்நிலையில், ஜம்முவில் இருந்து வெளியாகியுள்ள ஒரு வீடியோ அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது. அதில், ஒரு நபர் மழையிலும் வெள்ளத்திலும், ஒரு பசுவின் கன்றுக்குட்டியை தனது தோளில் தூக்கிக்கொண்டு செல்வது பதிவாகியுள்ளது.

வீடியோவில் அந்த நபர் முழுவதும் நனைந்தபடி, பிளாஸ்டிக் போர்வை போர்த்திக் கொண்டு இருக்கிறார். ஆனால் அந்தப் போர்வையும் அவருக்காக அல்ல, கன்றுக்காகவே பயன்படுத்தியுள்ளார். பாதை வெள்ளத்தில் ஆபத்தான நிலையில் இருந்ததால் கன்று தனியாக நடந்து செல்ல முடியாது என்று நினைத்த அவர், அதை தனது தோளில் சுமந்து பாதுகாப்பாக எடுத்துச் சென்றார்.

 

View this post on Instagram

 

A post shared by Narinder Singh (@narindersingh3071)

“>

மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற துடிக்கும் சூழ்நிலையில், கன்றின் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்ட அந்த நபரின் செயல், “அவனே ஒரு தேவதை போல” என்று பலர் பாராட்டுகின்றனர்.

 “இதுதான் உண்மையான ஆனிமல் லவர்” என பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.