காட்டின் அதிபதி என்றாலும் சிங்கங்கள்  சில நேரங்களில் மற்ற விலங்குகளின் முன் திணற வேண்டிய நிலை ஏற்படுகிறது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அதற்கு சான்றாக உள்ளது. அதில், குட்டி ஒட்டகசிவிங்கியை  பின்தொடர்ந்து வந்த சிங்கம்  திடீரென அதனைத் தாக்குகிறது. ஆனால் அங்கிருந்த தாய் ஒட்டகசிவிங்கி தன் குட்டியை காப்பாற்ற சிங்கத்தை  நேரடியாகத் தாக்கி விரட்டிவிடுகிறது. அச்சத்தில் சிங்கம்  அங்கிருந்து விலகி ஓட, குட்டி  உயிர் தப்புகிறது.

“>

இந்த வீடியோவை AmazingSights என்ற எக்ஸ் ஹாண்டில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை இதுவரை 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் லைக் செய்துள்ள நிலையில், பலர் இது உண்மையான வீடியோ அல்ல, ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட காட்சி என்றும் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி பெரும் பேசுபொருளாகியுள்ளது.