கேரளா மாநிலத்தில் உள்ள வெள்ளமுண்டா பகுதியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முகமது(38) என்பவர் தனது மனைவியுடன் தங்கி கூலி வேலை பார்க்கிறார். அப்போது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த முஜீப் (25) என்பவர் அவர்களுடன் நெருக்கமாக பழகி உள்ளார். நாட்கள் செல்ல செல்ல முஜீப் தனது மனைவியுடன் தகாத உறவில் இருப்பதாக முகமது சந்தேகப்பட்டார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முகமது ஒரு ஆட்டோவில் ஏறினார். ஒரு ஆற்றுப்பாலத்திற்கு அருகே ஆட்டோவை நிறுத்த சொன்னார்.
பின்னர் தான் கொண்டு சென்ற இரண்டு பைகளையும் ஆற்றில் வீசிவிட்டு அங்கிருந்து சென்றார். இதனை பார்த்து சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுனர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றல் வீசப்பட்ட இரண்டு பைகளையும் கைப்பற்றி திறந்து பார்த்தனர். அப்போது ஒரு ஆணின் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர் இதனையடுத்து போலீசார் முகமதுவை கைது செய்து விசாரணை நடத்திய போது மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகப்பட்டு முஜீப் கொலை செய்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
