உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த வித்தியாசமான சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பால்ய கால நண்பரிடம் கடன் பெற்றவர் அதை திருப்பிச் செலுத்தாமல் இறந்துவிட்டதால், அவரது இறுதிச் சடங்கின் போது சிதையை ஒரு நபர் கம்பியால் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த அதிர்ச்சி சம்பவம், அந்த இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களாக இருந்தனர் என்பதையும், ஒருவருக்கு ரூ.50,000 கடனாக கொடுத்து பின்னர் அதற்கான பணத்தை திருப்பிப் பெற முடியாமல் கோபமடைந்ததால் இப்படி நடந்தது என்பதையும் உறுதி செய்கிறது.
கிராமத்து கல்லறையில் இறந்த நபரின் இறுதிச் சடங்கு நடைபெற்று கொண்டிருந்த வேளையில், அவரது நண்பர் அங்கு விரைந்து சென்று, சிதை எரிவதை பார்த்தவுடன் கட்டையுடன் சென்று சிதையை அடிக்கத் தொடங்கியுள்ளார்.
சிதையில் இருந்த தீப்பொறிகள், விறகுகள் சுற்றிலும் சிதறி விழுந்ததால் அங்கு நின்றிருந்த மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இறந்தவரின் மனைவி மற்றும் குழந்தைகள் அருகே நின்றுகொண்டிருந்த சூழ்நிலையில், இந்த செயல் மேலும் உணர்ச்சிவசப்படுத்தும் சம்பவமாக மாறியது.
View this post on Instagram
“>
இந்த சம்பவத்தினை அங்கிருந்த இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். வீடியோவில், “என் பணம் என்னாச்சு?” எனக் கூறி, சிதையை தாக்கும் அந்த நபரைப் பார்க்க முடிகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், ஒருவர் இறந்த பிறகும் இந்த அளவுக்குக் கோபம் காட்டுவது தேவையா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
