ஓடும் ரயிலில் நடந்த ஒரு திருட்டுச் சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவரிடம் இருந்த தொலைபேசியைப் பறித்துவிட்டு ஒரு இளைஞர் ரயிலில் இருந்து தப்பிச் சென்றார்.

ரயில் நிற்கும் என எதிர்பார்க்காமல் பறித்து ஓடிய அந்த இளைஞரின் திட்டத்தில் ஒரு பெரிய பிழை ஏற்பட்டு விட்டது. எதிர்பாராத வகையில் ரயில் நிற்க, பயணிகள் அனைவரும் அவனைத் தேட ஆரம்பித்தனர். இது சம்பந்தமான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சம்பவம் நிகழ்ந்த இடம் ஒரு வயலின் அருகாமையில் உள்ள ஆற்றங்கரை பகுதியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் தங்கள் பொருளைத் திருடியவரை பிடிக்க விரைவாக ரயிலிலிருந்து இறங்கி, புல்லால் மூடியிருந்த வயல்களுக்குள் நுழைந்து தேடினர்.

 

View this post on Instagram

 

A post shared by Robin Singh Official (@robinofficial18)

“>

திருடன் பறித்த தொலைபேசியுடன் புல்லில் ஒளிந்து கொண்டிருந்தான். ஆனால், பயணிகள் தோளோடு தோள் நின்று கூட்டு முயற்சியில் ஈடுபட்டதால், கிட்டத்தட்ட ஒரு நிமிடத்துக்குள் அந்த இளைஞர் பிடிபட்டார்.

பின்னர் அவர் மீது மக்கள் கோபத்துடன் தாக்குதல் நடத்தினர். “தவறான ரயிலில் திருடிச் சென்றதால் இப்படி பட்டது” என்றே பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.  வீடியோவில் பயணிகள் அவரை பிடித்து தாக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. இதனால், ரயில்களில் பயணிக்கும் பொதுமக்கள் சிறிது கூட அஜாக்கிரதையுடன் இருக்கக் கூடாது என்பது மீண்டும் ஒருமுறை வலியுறுத்தப்படுகிறது.