பீகாரின் பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (PMCH) இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்றின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அறுவை சிகிச்சை அரங்கில் சிகிச்சை நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், கூரையிலிருந்து பிளாஸ்டர் துண்டுகள் விழுந்து, அங்கு பணியாற்றிய மருத்துவர் டாக்டர் ஆர்த்தோ காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிளாஸ்டர் விழுந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து டாக்டர் ஆர்த்தோ சமூக ஊடகங்களில் வெளியிட்டதிலிருந்து, இது பரவலான கவலையை ஏற்படுத்தியுள்ளது. “இத்தகைய பாதுகாப்பற்ற சூழலில் ஒருவர் எப்படி பணியாற்ற முடியும்?” என்ற அவரது கேள்வி மருத்துவ துறையின் கட்டடத் தரத்தைப் பற்றிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

“>

 

சம்பவம் தொடர்பான வீடியோவில், அறுவை சிகிச்சை அரங்கின் ஜன்னலுக்கு அருகே கூரையிலிருந்து பிளாஸ்டர் உடைந்து விழும் காட்சி தெளிவாகப் பதிவாகியுள்ளது. பிளாஸ்டர் நேராக விழுந்து, டாக்டர் ஆர்த்தோவின் காலில் காயம் ஏற்படுத்தியது.

மேலும் அருகில் நின்ற செவிலியர் ஒருவர், மிகப்பெரிய விபத்திலிருந்து மயிரிழையில் தப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. வீடியோவில், அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருந்த இடத்தில் ஏற்பட்ட இந்த பாதுகாப்பு குறைபாடு உலகின் இரண்டாவது பெரிய மருத்துவமனை என பெயரெடுத்திருக்கும் PMCH-யின் கட்டமைப்புச் செயல்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

“>

 

இந்த வீடியோவை X  பக்கத்தில் @Dr_KD_MS என்ற பயனர் பகிர்ந்ததோடு, “எனக்கு காயம் ஏற்பட்டது. செவிலியர் ஒருவர் நுனிலையில் உயிர்தப்பினார். இப்படிப் பாதுகாப்பின்றி மருத்துவமனை நடத்துவது எப்படிச் சரியாகும்?” எனக் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

இந்த வீடியோ 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 3,500-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. சமூக ஊடகங்களில் இது தொடர்பாக பயனர்கள் கடுமையான விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

ஒருவர், “ஒரு பெரிய விபத்து நடந்திருந்தால், யார் பொறுப்பேற்பார்கள்?” எனக் கேட்க, மற்றொருவர், “பீகாரில் உள்ள பழைய அரசு கட்டடங்கள் இந்த நிலையில் தான் இருக்கின்றன. அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்பதே இதற்குக் காரணம்” என வருத்தம் தெரிவித்துள்ளார்.