மும்பையின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான சர்ச்கேட் ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள நடைபாதையில், ஜோடி ஒன்று அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள அந்த இடத்தில், அருகில் மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போதே அந்த ஜோடி அநாகரீகமாகச் செயல்பட்டுள்ளது. அங்கிருந்த வழிப்போக்கர் ஒருவர் இதனைத் தனது கைபேசியில் படம்பிடித்து, அந்த ஜோடியை தட்டிக்கேட்டு எச்சரிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மும்பை போன்ற பெருநகரங்களில் பொது இடங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகப் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். சிலர் இது போதைப்பொருள் பழக்கத்தின் விளைவாக இருக்கலாம் என்று கூறினாலும், வேறு சிலர் இவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாக இருக்கலாம் எனவும் சந்தேகம் கிளப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மும்பை காவல்துறையோ அல்லது ரயில்வே காவல்துறையோ இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கம் எதையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
