தமிழகச் சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் போது, காங்கிரஸ் கட்சி தனது முழு ஆதரவை அதிரடியாக அறிவித்துள்ளது.

ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின்படி, 107 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-விற்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும் என அக்கட்சியின் உறுப்பினர் ராஜேஷ்குமார் பேரவையில் முழங்கினார். கட்சிப் பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற காங்கிரஸின் இந்த அழைப்பு, சட்டமன்றத்தில் புதிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.