தமிழக சட்டமன்றத்தில் இன்று ஒரு வரலாற்றுத் திருப்புமுனை அரங்கேறி வருகிறது. முதலமைச்சராகப் பதவியேற்ற சி. ஜோசப் விஜய், தனது தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான ‘நம்பிக்கை கோரும் தீர்மானத்தை’ (Vote of Confidence) முறைப்படி முன்மொழிந்தார். “இந்தச் சட்டமன்றம் தற்போதைய அமைச்சரவை மீது நம்பிக்கை கொண்டுள்ளது” என்ற தீர்மானத்தை அவர் வாசித்தபோது, சட்டமன்றமே பெரும் பரபரப்பில் ஆழ்ந்தது.

​ஏற்கனவே சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவு இருப்பதால், விஜய் இந்தத் தேர்வில் எளிதாக வெற்றி பெறுவார் எனத் தெரிகிறது. தீர்மானத்தை அவர் முன்மொழிந்ததைத் தொடர்ந்து, தற்போது அதன் மீது விவாதங்களும், வாக்கெடுப்புக்கான நடைமுறைகளும் விறுவிறுப்பாகத் தொடங்கிவிட்டன. 1967-க்குப் பிறகு திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு தலைவரின் இந்த அதிரடி நகர்வு, தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.