தமிழக அரசியலின் உச்சக்கட்ட பரபரப்புக்கு இடையே, இன்று சட்டப்பேரவையில் தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் முறைப்படி முன்மொழிந்தார்.

“மக்களின் பேராதரவுடன் அமைந்த இந்த அரசு, தனது மெஜாரிட்டியை நிரூபிக்கத் தயார்” என அவர் கம்பீரமாக அறிவித்தபோது, ஆளுங்கட்சி தரப்பில் பலத்த வரவேற்பு கிடைத்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மற்றும் வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், விஜய்யின் இந்தத் தீர்மானம் கோட்டை வட்டாரத்தில் அனலை கிளப்பியுள்ளது.