இந்திய இரயில்வே தற்போது நவீனமயமாகி வரும் முக்கிய நிர்வாகத் துறைகளில் ஒன்றாக மாறியுள்ளது. நீராவி, நிலக்கரி, டீசல் என தொடங்கி, தற்போது மின்சார ரயில்கள் மற்றும் புல்லட் ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இரயில் போக்குவரத்தை வேகமாகவும், பாதுகாப்பாகவும் மாற்றும் நோக்கில், மெட்ரோ, வந்தே பாரத், புல்லட் ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது. ஆனால், நவீனமயமாகும் இரயில் அமைப்புகளால் ஏற்படும் அபாயங்களைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் பலருக்கு சரியாக தெரியவில்லை என்பதே உண்மை.

அந்த வகையில் மூன்று நண்பர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து செல்பி எடுக்க முயன்ற போது, அவர்களில் ஒருவர் க்ரீன் லைன் எனப்படும் பகுதி தண்டவாளத்தை தன்னுடைய கைகளால் தொட முயன்றார். இதனால், அருகிலிருந்த மின்சார அமைப்பில் இருந்து மின்சாரம் தாக்கி அவர் பேச்சு மூச்சில்லாமல் கிடந்தார். அவருடன் இருந்த மற்றொரு நண்பரையும் மின்சாரம் தாக்கியது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர்தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.