உத்திரபிரதே மாநிலத்திலுள்ள மணிப்பூரி பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது பைக்கில் ஒரு போலீஸ்காரர் மற்றும் மற்றொருவர் செல்லும் நிலையில் பின்னால் அமர்ந்துள்ள போலீஸ்காரர் தலையில் ஹெல்மெட் அணிந்துள்ளார். ஆனால் குற்றவாளி ஹெல்மெட் அணியாத நிலையில் அவருடைய ஒரு கையில் கயிறைக்கட்டி அந்த போலீஸ்காரர் தன்னுடைய ஒரு கையால் அதனை பிடித்துள்ளார்.
அதாவது அந்த சமயத்தில் குழு அதிகமாக இருந்ததால் போலீஸ்காரரால் வண்டி ஓட்ட முடியாததால் குற்றவாளியை வண்டி ஓட்டுமாறு கூறியுள்ளார். அப்போது அவர் எங்கும் தப்பி ஓடிவிடக்கூடாது என்பதற்காக கயிறால் அவரை கட்டி வைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உத்திரபிரதேச மாநில காவல்துறையினர் விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர். மேலும் முன்னதாக அந்த மாநிலத்தில் காரில் சென்றவர் ஹெல்மெட் அணியாத காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
पुलिस वाला- सर्दी लग रही है
कैदी- सर मैं बाइक लेकर चलता हूं
पुलिस वाला- ठीक है भाई, बस भागना नहीं..उत्तर प्रदेर का भौकाल सिस्टम? pic.twitter.com/kCJ6a2zrGz
— Ravi Prashant (@iamraviprashant) December 9, 2024
